Sunday, April 28, 2024 12:52 am

கனமழையால் சென்னையில் எந்த பாதிப்பும் இல்லை : கூடுதல் தலைமைச் செயலாளர் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் இன்று (ஜூன் 19) பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் தற்போது 2,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. அதைப்போல், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.  மேலும், இந்த குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் தொடர்பான புகார் எண்: 044-4567 4567 தரப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த கனமழையால் சென்னையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. மீனம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் 16 செ.மீ. வரை மழைப் பதிவாகியுள்ளது. இனி மழைநீர் வடிகால் பணிகள், சாலை அமைக்கும் பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு முடிக்கப்படும். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் கணேசபுரம் தவிர்த்து மற்ற இடங்களில் போக்குவரத்து எந்த இடையூறு இல்லை எனக் கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா சற்றுமுன் பேட்டியளித்துள்ளார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்