Wednesday, May 31, 2023 2:40 am

ஏற்காடு ஏரியில் படகுப் போட்டி : சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் திடீர் சூறாவளி காற்று : மக்கள் கடும் அவதி

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில...

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த முத்தமிழ்செல்வி : அமைச்சர் உதயநிதி பாராட்டு

இன்று (மே 30) சென்னை தலைமை அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும்...

தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்யும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம்

மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ்நாட்டில்...

வானிலை மையம் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி...
தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறையில் பல மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்தந்த சுற்றுலாத் தலங்கள் மக்களைக் கவர பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், சேலத்தில் உள்ள ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடை விழாவை முன்னிட்டு படகு போட்டி நடைபெற்று வருகிறது.
இங்குத் தமிழகம், புதுச்சேரி, கேரளா, பெங்களூரு போன்ற இடங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் படையடுத்து வருவதால், அவர்களுக்கு இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இந்த படகு போட்டியில் ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், தம்பதியர், உள்ளூர் வாசிகள், படகு இல்ல ஊழியர்கள் மற்றும் ஊடகத்துறையினர் போன்ற பல பிரிவுகளில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர்களுக்கான போட்டியில் புதுச்சேரி மற்றும் சென்னையைச் சேர்ந்த பெண்கள், முதல் இரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளனர். மேலும், அனைத்து பிரிவுகளிலும் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்குத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்