இன்றைய சூழலில் நாள்தோறும் பல குற்றங்கள் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடலூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் நிறைய நாளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு வீட்டில் பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதை அறிந்த காதலி, காதலனிடம் கேட்ட போது காதலியைக் கழற்றிவிட்டு உள்ளார்.
இதனால் கோபமடைந்த காதலி, தன்னை ஏமாற்றிவிட்டதாக இரவு முழுவதும் காதலன் வீட்டின் முன், காதலி தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் விசாரித்து வேறு பெண்ணை மணக்க இருந்த சுப்பிரமணியன் என்பவரை மணக்கோலத்தில் மணமேடையில் வைத்தே கைது செய்துள்ளனர்.
- Advertisement -