Wednesday, May 31, 2023 1:55 am

தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் திடீர் சூறாவளி காற்று : மக்கள் கடும் அவதி

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில...

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த முத்தமிழ்செல்வி : அமைச்சர் உதயநிதி பாராட்டு

இன்று (மே 30) சென்னை தலைமை அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும்...

தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்யும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம்

மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ்நாட்டில்...

வானிலை மையம் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொறியியல் படிப்புகளைத் தமிழ் வழியாகப் படிக்க வேண்டும் எனக் கருத்தில் கொண்டு,  சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் மாணவர்கள் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தமிழ் வழி பொறியியல் படிப்பு படிக்க போதிய மாணவர்கள் சேர்த்ததால், இந்த 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், 6 உறுப்பு கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில் குரூப்களில் ஆங்கில பாடப்பிரிவும் தற்காலிக மூடப்படுகிறது. ஏனென்றால், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் பல்கலை நிர்வாகம் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்