Friday, April 26, 2024 6:06 am

கோவையில் போதையின் உச்சத்தில் பனைமர உச்சியில் உறங்கிய நபர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் அமைந்துள்ள 120 அடி உயரம் கொண்ட பனைமரத்தின் மீது ஏறி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது போதை உச்சிக்கு ஏறி அங்கேயே படுத்து உறங்கி உள்ளார். இதனால் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை வந்து அவரை அழைத்தும் உறங்கிருந்த அவரை எழுப்ப முடியாமல் திணறி உள்ளனர்.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்து கயிறு கட்டியும் கீழே வலைவிரித்தும் அந்த நபரை மீட்க முயற்சித்தனர். ஆனால், இந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அதற்கு பின் இரும்பு குண்டு பொருத்தப்பட்ட கிரேன் வந்து, அதன்மூலம் தீயணைப்புத் துறை வீரர்கள் ஏறி பனைமரத்தின் கிளைகளில் உறங்கிக் கொண்டிருந்தவரை லாபமாக தூக்கி கீழே கொண்டு வந்தனர்.

இதில் அவரை மீட்பதற்குத் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலும் போராடினர். இதனால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் கைதட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்