Wednesday, June 7, 2023 5:44 pm

மெரினா கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவுச் சின்னம் நிறுவ மத்திய அரசு அனுமதி..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
- Advertisement -

சென்னை மெரினா கடலுக்கு நடுவே கலைஞரின் பேனா சின்னத்தை அமைப்பதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் தமிழக அரசு அனுமதி வேண்டிருந்தது. இதற்காக சுற்றுசூழல் துறைக்கு விரிவாக ஆய்வு செய்து தனது மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்றது மத்திய அரசு. இதன் காரணமாக தற்போது 2.23 ஏக்கர் பரப்பளவில் இந்த பேனா நினைவு சின்னத்திற்கான கட்டிடத்தை கட்டிவருகிறது தமிழக அரசு.

இந்த பேனா நினைவு சின்னம் நடுக்கடலில் கட்ட ரூ.81 கோடி செலவில் சுமார் 134 அடி உயரத்திற்கு பிரமணடமாக அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல துறைகளில் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளது. இதில் முதற்கட்டமாக தற்போது மத்திய அரசு அனுமதி அளித்ததையொட்டி, தமிழக அரசு இந்த நினைவு சின்னம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கணிப்பும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த பேனா சின்னத்தை அமைக்க அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு மிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் ஒன்றை அனுப்பியது. இதில் சுற்றுச்சூழலின் அறிக்கை இந்த கடிதம் மூலம் மத்திய அரசுக்கு தெரிவித்ததையொட்டி, தற்போது தமிழக அரசுக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்