தமிழகத்தில் உள்ள வாணிக கழகத்தினால் சுமார் 101 இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் மதுபான சில்லறை விற்பனை இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த சில்லறை விற்பனைகளில் மதுபான விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன் காரணமாக, இந்த கூடுதல் விலையில் மதுபான விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், முதற்கட்டமாக 4 மதுபான சில்லறை கடைகளில் மட்டும் கடைக்குளேயே இனி தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரத்தின் மூலம், இனி அதிக விலை கொடுத்து மதுபானம் விற்பதை தடுக்க முடியும் என்றும், இந்த இயந்திரம் கடைக்குளேயே வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த இயந்திரம் அந்த மதுபான கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே இந்த சில்லறை விற்பனை கணிக்கணிக்கப்படும்.
அதனால், இந்த இயந்திரத்தால் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், இது கடைகளின் விற்பனை நேரமான நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியும். மேலும், இந்த இயந்திரத்தை மதுபானம் நுகர்வோர் தவிர மற்ற பொதுமக்களால் அணுக முடியாது என தெரிவித்துள்ளார்.