Friday, April 26, 2024 6:45 am

பாஜகவில் சேர்கிறதா ஓபிஎஸ்..? அண்ணாமலை பரபரப்பு பதில்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவிற்காக ஓ.பன்னீர்செல்வம் 2 முறை தர்மயுத்தம் நடத்தி தோல்வி அடைந்துள்ளார். அதனால் இப்போது அதிமுக கட்சி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வசமாகியுள்ளது. இதனால் இந்த கட்சி , சின்னம் என அனைத்தும் எடப்பாடி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில், ஓபிஎஸ் அணி திருச்சியில் சமீபத்தில் நடத்திய மாநாட்டிலும் பெரிதளவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. அதேவேளை, அதிமுகவின் பொதுச்செயலாளரான பழனிசாமி தலைமையில் , அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் டெல்லி சென்று அங்குள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய போது, அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடனிருந்து குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான அதிமுக – பாஜக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என கூறினர். ஆனால் தற்போது பாஜகவிற்கு 25 இடம் கொடுத்தால் தான் கூட்டணி என திடீரென கூறிவருகின்றனர். இதற்கு தற்போது அதிமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில் பத்திரிகையாளர்கள் அதிமுக குறித்து அண்ணாமலையிடம் கேள்வி கேட்ட போது, EPS-யுடன் எந்த பிரச்சனை இல்லை என்று கூறினார்.

மேலும் ஒரு நிருபர் பாஜகவில் ஓபிஎஸ் இணைவாரா? என்ற கேள்வி கேட்டபோது, பொறுத்திருந்து பருக்களை என அண்ணாமலை கூறி இருக்கிறார். இதனால் எதிர்காலத்தில் சேர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்