தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவு வருகிறது. இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், சுமார் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதிலிலும் குறிப்பாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். அதைபோல், நாளை (ஏப்ரல் .29ல்) நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் பெய்ய வாய்ப்புள்ளது. வருகின்றன ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியில் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என கூறியுள்ளனர்.