Monday, April 29, 2024 3:45 am

ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகருகிறது. இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகம் வரும் மே 23, 24 ஆம் தேதியில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து மே 18ல ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த பிளே ஆஃப்-க்கான ஐபிஎல் டிக்கெட் விற்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விற்பனை தொடங்கி சில மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டும் விற்றதாகத் தகவல் வெளியாகியது. இதனால், பல ரசிகர்கள் சிறிது நேரத்திலேயும், இணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை போன்ற காரணங்களைக் கூறி புகார் தெரிவித்திருந்தனர். அதனால் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை விவரங்களைத் தாக்கல் செய்யக் கோரி, அசோக் சக்கரவர்த்தி என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

ஏனென்றால், இந்த ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், பெரும்பாலான டிக்கெட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளதாகவும் புகார் வந்ததை ஒட்டி, இந்த விற்பனை குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிடவும் இவ்வழக்கில் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்