கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், இந்த பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 19) வெளியாகிறது. இதன்படி இன்று காலை 10 மணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என அரசு இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in , http://dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் மாணவர்கள் அவர்களின் மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்களின் கைப்பேசி எண்ணில் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- Advertisement -