ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 16 லட்சம் மோசடி செய்த பாஜக பிரமுகர் அறிவழகன், மற்றும் அவரது மனைவி லாவண்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுவையைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் காத்தவராயன் அளித்த புகாரில், தலைமறைவாக உள்ள தம்பதியை போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் சொந்த கட்சியினர்க்கிடையே இப்படி மோசடி நடந்திருப்பது பாஜக தொண்டர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -