Friday, April 26, 2024 3:55 am

இனி ட்விட்டர் நிறுவனத்தில் புதிதாக பெண் சிஇஓ நியமனம் : எலன் மாஸ்க் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ட்விட்டர் மிக பிரபலமான ஒன்றாகும். முதன் முதலில் ட்விட்டரின் சிஇஓ-வாக ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார். பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார்.அதன்பின், உலகின் பெரும் பணக்காரர் மற்றும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 45 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

மேலும், இவர் வந்த பிறகு முதற்கட்ட நடவடிக்கையாக பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட பலரை பணி நீக்கம் செய்தார். ஆனால், புதிய சிஇஓ பதிவி காலியாகவே இருந்து வந்தது. இதற்காக புதிய நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில், புதிதாக பெண் தலைமை நிர்வாக அதிகாரியை (சிஇஓ) தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இவர் 6 வாரத்திற்குள் இந்த பதவியை ஏற்று அவரது பணியை மேற்கொள்வார் என தெரிவித்தார்.

மேலும், இந்த ட்விட்டர் நிறுவனத்தில், தயாரிப்பு மென்பொருள் நிர்வாக தலைவர் மற்றும் தகவல் தொழில்நுட்ப தலைவராக தனது பங்களிப்பு இருக்கும் என எலன் மாஸ்க் அறிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்