Tuesday, May 30, 2023 9:53 pm

காவிரியில் கழிவுநீரா..? தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆவேசம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் திடீர் சூறாவளி காற்று : மக்கள் கடும் அவதி

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில...

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த முத்தமிழ்செல்வி : அமைச்சர் உதயநிதி பாராட்டு

இன்று (மே 30) சென்னை தலைமை அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும்...

தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்யும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம்

மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ்நாட்டில்...

வானிலை மையம் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி...
- Advertisement -

கர்நாடகா மாநிலத்திலுள்ள காவிரி ஆற்றில் சமீபகாலமாக கழிவு நீர் கலப்பதாக தொடர்ந்து செய்தி வெளியாகி வந்த நிலையில், இது குறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் கர்நாடக அரசுக்கு சற்றுமுன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நடப்பாண்டு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 658 டி எம் சி தண்ணீர் வழங்கிருப்பதாகவும், இது காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை விட 484 டிஎம்சி கூடுதல் நீர் என கூறினார்.

ஆனால், பெங்களூர் நகரத்தில் உள்ள குடியிருப்புகள் , வர்த்தக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக காவிரியில் கலப்பதாக இறையன்பு அவர்கள் குற்றசாட்டியுள்ளார். மேலும், காவிரியில் ஆற்றில் அங்கங்கே இருக்கும் பச்சை நிறத்துடன் சாக்கடை கழிவு நீர் ஓடிகொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.

அதேசமயம், தமிழகத்திற்கு கிடைக்கும் காவிரியில் நீரில் பெருமளவு கழிவுநீராக இருப்பது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தார். இந்த கழிவு நீர் கலப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் கர்நாடகா அரசிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்