Friday, April 26, 2024 6:28 pm

நீட் தேர்வு விலக்கு பெறுமா.? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை.

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் நீட் தேர்வு விலக்கம் பெறுவதில் தாமதம் கூடாது என்று கூறியிருந்தார். நேற்று முன்தினம் சென்னை மாவட்டம் சூளைமேட்டை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன் நீட் தேர்வில் நான் எங்கு தோல்வியாகி விடுவேனோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று விளக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இதேபோல் இனிமேல் நடக்கக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கையை வெளியீட்டு இருந்தார் அதில் நீட் தேர்வு எழுதுவதற்கு ஏற்படும் மாற்றம் மற்றும் மன அழுத்தம் காரணமாக தான் மாணவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

உடனடியாக தமிழக முதல்வர் அவர்கள் நீட் தேர்வு விலக்கு குறித்து டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அழிக்க சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

ஆனால் மாதங்கள் கடந்தும் இதற்கு தமிழக அரசு தாமதம் காட்ட கூடாது தமிழக முதல்வர் உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழகத்தில் நீட் தேர்வு தொடங்க இன்னும் எட்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்வு எழுத மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சம் மன அழுத்தம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று அவர் அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்