எலுமிச்சையின் மணமும், லேசான இனிப்புச் சுவையும் கொண்ட ஒரு வகை வாசனைப் புல் ‘லெமன்கிராஸ்’. இதில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க உதவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை முறைப்படுத்தும். அதைப்போல், கோடைக்காலத்தில் லெமன்கிராஸ் ஜூஸ் அருந்துவது உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
மேலும், இது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மைக்காக அரோமாதெரபி எனப்படும் வாசனை சிகிச்சையில் லெமன்கிராஸ் ஆயில் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள “சிட்ரல்” கலவை, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இந்த லெமன்கிராஸில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், சருமம் மற்றும் முடியைப் பாதுகாக்கும்.
மேலும், இது பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியைக் குறைக்கும். அதேசமயம், இது சோப்பு, அழகுசாதனங்கள் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது.