Saturday, June 3, 2023 10:55 pm

உடல் எடையைக் குறைக்கும் எலுமிச்சைப் புல்

spot_img

தொடர்புடைய கதைகள்

நரை முடி கருமையாக வளர நீங்கள் செய்ய வேண்டியது

முட்டையை விட உங்கள் முடியின் போஷாக்கிற்குச் சிறந்த தீர்வு என்னாவாக இருக்க...

கண்டிப்பாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள்

இன்றைய சூழலில் பலரும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் தினசரி பருகி வருகின்றனர்....

தூங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

பொதுவாக நீங்கள் ஒழுங்கற்ற பொசிஷனில் உறங்குவது, எதுக்களித்தல் ஏற்பட முக்கியக் காரணம். குப்புறப் படுப்பது,...

சளி, மூக்கடைப்பை குணமாக்கும் ஓமம்

உங்களுக்குச் சளி ஒழுகுதல், மூக்கடைப்பு இருக்கிறதா? அதை  விரட்ட இந்த ஓமம் பெரிதும்...
- Advertisement -

எலுமிச்சையின் மணமும், லேசான இனிப்புச் சுவையும் கொண்ட ஒரு வகை வாசனைப் புல் ‘லெமன்கிராஸ்’. இதில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க உதவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை முறைப்படுத்தும். அதைப்போல், கோடைக்காலத்தில் லெமன்கிராஸ் ஜூஸ் அருந்துவது உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

மேலும், இது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மைக்காக அரோமாதெரபி எனப்படும் வாசனை சிகிச்சையில் லெமன்கிராஸ் ஆயில் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள “சிட்ரல்” கலவை, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இந்த லெமன்கிராஸில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், சருமம் மற்றும் முடியைப் பாதுகாக்கும்.

மேலும், இது பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியைக் குறைக்கும். அதேசமயம், இது  சோப்பு, அழகுசாதனங்கள் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்