Saturday, April 27, 2024 11:47 pm

FLASH : பாஜகவுடன் கூட்டணி கிடையாது .. எடப்பாடி பழனிசாமி அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நிருபர்களிடமிருந்து அதிமுக -பாஜக கூட்டணி குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்கு எடப்பாடி அவர்கள், ” பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை எனத் தெளிவாகக் கூறிவிட்டேன், 2 கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், அவர்  கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது பல தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வியடைந்துள்ளது . கூட்டணி தொடர வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியது அவரது சொந்தக் கருத்து, அதுக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என ‘பொறுத்திருந்து பாருங்கள்”’ என அதிரடியாகப் பதிலளித்தார்.

அதேசமயம், இந்த பேட்டியில் எடப்பாடி அவர்கள்,  “பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் எங்களது தெளிவான நிலைப்பாடு. பாஜக அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக்க வேண்டும் என பாஜக எங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை;.அண்ணாமலையை மாநில பாஜக தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என நாங்களும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” எனத் திட்டவட்டமாகக் கூறினார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்