Thursday, May 2, 2024 8:25 am

மணிப்பூர் அவலத்தின் உச்சம் : விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூரில் 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இணையத்தில் நாடே கொதித்தெழுந்தது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இம்மண்ணில் தலித்துகளுக்கும் பழங்குடிகளுக்கும் எதிராக்க, காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக இத்தகைய கேவலமான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. இந்த இழிச்செயல்களை தங்களின் சாதிப் பெருமைகளென இவர்கள் நம்புவதுதான் இழிவினும் இழிவான பித்துக்குளித்தனமாகும்” என்றார்.
மேலும், அவர் ” இப்படி அப்பாவிகளை வதைத்துப் படுகொலை செய்வது, வாயில் மலம் திணிப்பது, சிறுநீர் கழிப்பது, குடிசைகளைக் கொளுத்துவது, உடைமைகளைச் சேதப்படுத்துவது, பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்வது, கூட்டுப் பாலியல் வல்லுறவு கொள்வது, கொள்ளையடிப்பது, ஆணவக் கொலைகள் செய்வது என விவரிக்க இயலாத வன்கொடுமைகளைச் செய்து, அவற்றை வீரதீர செயல்கள் எனப் போலியாய்க் கர்வம் கொள்வதுதான் இவர்களின் மரபணுக்களில் கொட்டம் அடிக்கும் மனநோய் அவலத்தின் உச்சம்” எனக் கூறி இந்த சம்பவம் குறித்து தனது காட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்