Wednesday, June 7, 2023 6:44 pm

திருமண தடை நீங்கும் எளிய பரிகாரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

ராகு – கேது தோஷம் நீங்க பரிகாரம்

தினசரி விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் இந்த ராகு - கேது...

திருமண பொருத்தம் பார்க்கும் போது இது தான் அடிப்படை விதிகள்

பொதுவாக ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரு நட்சத்திரமாக இருக்கக்கூடாது. பகையோனி...

காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்?

உங்கள் காலில் கறுப்பு கயிற்றைப் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு, சனிக்கிழமையில்...

சிவராத்திரி வழிபாட்டின் நோக்கம் என்ன தெரியுமா ?

சிவ வழிபாட்டிற்கு உகந்த நான் சிவராத்திரி. இது மாசி மாத தேய்பிறை...
நம் வாழ்வில் மாணவ பருவம், இளைஞர் பருவம், குடும்ப ஸ்தானம், வயோதிகம் எனப் பல நிலைகள் உள்ளன. இதில் ஒவ்வொரு நிலையிலும் ஒரு செக்போஸ்ட் போன்ற நிகழ்வுகள் இருக்கும். அதில் இளைஞர்கள் படித்து முடித்ததும் வேலையில் சேருவது மிகப்பெரிய நிலையாகப் பார்க்கப்படுகின்றது. அடுத்து அவர்கள் திருமணப் பந்தத்தில் இணையும் மற்றும் சமூகத்தில் குடும்பம் என்ற புது பந்தத்தில் இணையும் நிலை வருகின்றது.
இந்த நிலை வந்ததும் ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோரும் மகிழ்ச்சி, குழப்பம், மன வருத்தமும் அடைகின்றனர். சிலருக்கு வேகமாக வரன் அமைந்து திருமணம் நடந்து விடுகின்றது. அவர்களின் பெற்றோர் மிகுந்த மன மகிழ்ச்சி கொள்கின்றனர். அதே சமயம் சிலரின் பிள்ளைகளுக்குத் திருமணத்திற்குச் சரியான வரன் அமையாமல், திருமணத் தடை ஏற்படுவதால் அவரின் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், நீண்ட கால திருமணத் தடை உள்ளவர்களுக்கு மிகச் சக்தி வாய்ந்த அதோடு சற்று எளிய பரிகாரம் இருக்கின்றது. இவர்கள் வெள்ளிக்கிழமையில் திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்வதால் திருமண பாக்கியம் ஏற்படும். அந்த நாள் பௌர்ணமி தினமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி கிரிவலம் செய்யும் பலருக்கு விரைவில் வரன் அமைந்து திருமணம் கைகூடும் என்பது பலரும் நம்பக்கூடிய, பலருக்கும் திருமணம் பாக்கியம் கிடைத்த பரிகாரம் என்பதால், இந்த பரிகாரத்தைச் செய்து திருமணத் தடை உள்ளவர்கள் திருமண பாக்கியத்தைப் பெற்று மகிழுங்கள்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்