திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இந்த கோடை விடுமுறையால் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைபோல் திரண்டு வருகிறது. இதனால் எந்தவித டிக்கெட்டுகளும் இல்லாமல் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ரூ.300 டிக்கெட் இணையத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரமும், திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசன நேர ஒதுக்கீடு இலவச டிக்கெட் பெறும் பக்தர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதன் காரணமாக, இனி வரும் ஜூன் 15ம் தேதி வரை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதத்தின் அடிப்படையில் வழங்கும் விஐபி தரிசனம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாகத் திருப்பதி தேவஸ்தானம் செயல் அதிகாரி தர்மா சற்றுமுன் அறிவித்துள்ளார்.
- Advertisement -