Monday, June 5, 2023 10:39 pm

இந்தியாவில் 71,000 பேருக்கு அரசு பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உண்மையை மறைக்க இது நேரம் அல்ல : மேற்குவங்க முதல்வர் மம்தா கருத்து

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் கொல்கத்தாவில் இருந்து சென்னை...

போராட்டம் கைவிடப்படவில்லை : மல்யுத்த வீராங்கனைகள் பேட்டி

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும் , பாஜக எம்.பிமான பூஷன் சரண் மீது ...

ஒடிசா ரயில் விபத்து : பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி

ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதியில் நடந்த கோரமண்டல் ரயில்...

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி

நேற்று முன்தினம் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. அப்போது...
- Advertisement -

இந்தியாவில் ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு முகாம் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்போவதாக ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. அதனால் இன்று (மே 16) காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி அவர்கள் அரசு துறைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். பின்னர் இந்த பணி நியமன நிகழ்ச்சியில், வேலை பெறுவோருடனும் பிரதமர் உரையாட உள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள 45 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்றும், இன்று தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 71,000 பேர் இளநிலை கணக்கு எழுத்தர், தண்டவாளப் பராமரிப்பாளர், உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை எழுத்தர், துணைப் பிரிவு அலுவலர், வரி உதவியாளர்கள், உதவி அமலாக்கத் துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், செவிலியர் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரிகள், உதவி தணிக்கை அதிகாரி போன்ற பணிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும், இன்று சென்னையில் 247 பேருக்கு அஞ்சல், ரயில்வே பணி நியமன ஆணைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்