Sunday, June 4, 2023 2:19 am

தி கேரளா ஸ்டோரிக்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்கவில்லை

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில்...

ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ''நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல்...

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் : வெளியான பரபரப்பு தகவல்

நேற்று 3 ரயில்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தானதைக் குறித்து விசாரணை நடைபெற்று...

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில்,...
- Advertisement -

இந்தி இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில், கேரளாவில் வாழும் வேறு மதத்து பெண்களை கடத்தி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய பின், அவர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர்வது போல் காட்சி அமைக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்பு பல மாநிலங்களில் கிளம்பியது. ஆகவே, இப்படத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் ஏற்படத்திற்கு நல்ல சான்றிதழ் வழங்கப்பட்டதால் இப்படத்தை தடை செய்ய முடியாது என கூறி இது தொடர்பான அனைத்து வழக்கையும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இப்படம் தடை விதிக்கப்பட்டதும், தமிழகத்தில் இப்படம் வெளியானத்திற்கு போராட்டம் மற்றும் தியேட்டரில் இப்படம் வெளியாகாமல் இருந்தது குறித்து உச்சநீதிமன்றம் இவ்விருமாநிலங்களும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், ”தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தமிழக மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால், திரையரங்குகளே தாங்களாக முன்வந்து படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளனர். மேலும், இந்த திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்துவிட்டதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு சற்றுமுன் பதில் அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்