கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 13 ஆம் தேதியன்று நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதால் தனி பெருபான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர் பதிவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் கடும் போட்டி நிலவுகிறது. பின்னர் கடந்த மே 14ஆம் தேதி பெங்களுருவில் நடந்த கட்சி கூட்டத்தில், கர்நாடகாவின் முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடமே தேர்வு செய்யட்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (மே 16) டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில், கர்நாடகாவில் முதலமைச்சர் யார் என்பதை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த ஆலோசனையில் ராகுல் காந்தி முதன்முறையாக பங்கேற்றியுள்ளார். அதைபோல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியது.