Saturday, April 27, 2024 2:57 am

எந்த மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சில குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே சில சுபகாரியங்களை செய்ய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி, சித்திரை, வைகாசி, ஆனி, தை, பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். அப்படி செய்வதால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர் மற்றும் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும் என்பது ஐதீகம்.

அதைபோல், இந்த சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையைத் துவங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். மேலும், இந்த சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் கிணறு வெட்டினால் அது என்றும் வற்றாது என நம்பிக்கை

இந்த புரட்டாசியில் வரும் விஜய தசமியன்று கல்வி கற்றுக்கொள்ளத் துவங்கினால் நல்ல கல்வியறிவு கிடைக்கும். ஆனால், இந்த ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் வீடு வாங்கவும் கூடாது. வீடு குடியேறவும் கூடாது. பொதுவாக எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது.

மேலும், நீங்கள் ஏதாவதொரு மாதத்தில் 2 அமாவாசைகள், 2 பவுர்ணமிகள் வருமானால் அம்மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்யக்கூடாது என ஜோதிட நிபுணர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்