Thursday, May 2, 2024 10:28 pm

மண்பானையில் பொங்கல் வைத்து சமைப்பது ஏன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொங்கலை பொதுவாக மண்பானையில் தான் சமைக்க வேண்டும். அது தான் தமிழரின் தொன்று தொட்டு வரும் வழக்கம். ஆனால் இன்று நகரத்தில் பொங்கல் தினத்தன்று குக்கரில் சமைத்து கொண்டாடி வருகிறோம். இது வருங்கால தலைமுறையினருக்கு மண்பானையில் ஏன் பொங்கலை சமைக்க வேண்டும் என்று கற்று தர வேண்டிய நேரம் இது.

ஆம் மண்பானையில் தான் பொங்கலை சமைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் மண்பானையின் நுண் துளைகளின் வழியாக நீராவியும் காற்றும் உணவின் மீது சீராகவும் மெதுவாகவும் பரவும், இதனால் என்ன பயன் கிடைக்குமென்றால் சுத்தம் செய்யப்படாத அரிசி, காய்கறிகளாக இருந்தாலும் மண் பானையில் சமைக்கும் போது கிருமிகள் அழிந்து விடும். அடுப்பைவிட்டு இறக்கினாலும் சூடு ஆறாமல் அதன் தன்மை கெடாமல் பாதுகாக்கும்.

மேலும், உணவின் சத்துகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு எளிதாகச் செரிமானமாகும், உடலுக்கு தரக்கூடிய அனைத்து பலத்தையும் மண்பானை பொங்கல் சேர்த்து விடும். பொங்கல் தினம் என்பது இயற்கையை வணங்கும் முறையாகும். மண்பானை என்பது இயற்கை தந்த வரமே. அதற்கு மனிதன் உருவம் கொடுக்கிறான் அவ்வளவே. ஆகையால் மண்பானையில் வைத்து பொங்கலை வைத்து இயற்கையை வழிபடுவோம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்