Wednesday, December 6, 2023 1:07 pm

கோயில்களில் மணி அடிக்கும் முறை தெரியுமா

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாம் கோயில்களில் அடிக்கும் மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப்படுகிறது என்று அர்த்தம். அதுவே கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம். இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது
என்று அர்த்தம். மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம். நாம் மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக நாம் மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும். பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும். ஆனால், நாம் இடது கையால் மணியை எடுக்கவே கூடாது.

அதைபோல், கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது. பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது என கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்