Tuesday, April 30, 2024 11:48 am

குற்றவாளியின் பற்களை பிடுங்கிய விவகாரம் : ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நெல்லை மாவட்டம் அம்பை கோட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற குற்றவாளிகளுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் வந்திருந்தன. இதனால், இந்த புகாரில் சம்மந்தப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இதில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன், 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் சேர்த்தப்பட்டனர். அதைபோல், உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், நெல்லையில் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது ஏற்கனவே 3 வழக்குகள்போடப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தது சிபிசிஐடி. அது ஜமீன் சிங்கப்பட்டியை சேர்ந்த சூர்யா அளித்த புகாரின் பேரில், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோசப் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்