Wednesday, June 7, 2023 5:10 pm

சூடான் போரில் சிக்கிய 9 தமிழர்கள் மதுரை, சென்னை வந்தனர்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

மிக தீவிரமாக வலுப்பெற்றது பிபோர்ஜோய் புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  மையம் கொண்டுள்ள...

ஒடிசா ரயில் விபத்து : கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல்...

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000...

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...
- Advertisement -

சூடானில் நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கும் இடையே சில நாட்களாக கடும் சண்டை நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போர் காரணமாக மோசமான சூழ்நிலை நிலவுகிறது.மேலும், இங்கு வாழும் வெளிநாட்டினரை மீட்க உள்ளதால் சூடானில் 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு சிக்கி வாழும் 400 இந்தியர்களை வெளியேற்ற ஆபரேஷன் காவேரி மீட்பு படை கடல் வழியாக சென்று மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அரசு முதற்கட்டமாக 551 பேரை சூடான் துறைமுகத்திற்கு அழைத்து வந்த பின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மற்றும் விமானம் மூலம் சவுதி அரேபியாக்கு சென்று அங்கிருந்து 360 இந்தியர்களை ஏற்றிக் கொண்ட தனி விமானம் நேற்று இரவு 9.30 மணி அளவில் டெல்லியை வந்தடைந்துள்ளது.இந்த 360 இந்தியர்களில் 9 பேர் தமிழர்கள். இதில் 5 பேர் தற்போது சென்னை வந்தனர், மீதி 4 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். இந்த தமிழர்களை அழைத்து வருவதற்கு தமிழக அரசே செலவை ஏற்று கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி சூடானில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தங்களது திகில் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அதில் அவர்களை துப்பாக்கி முனையில் பிணைய கைதியாகி தங்களிடம் கொள்ளையடித்ததாகவும், கடந்த 3 நாட்களாக உணவின்றி பரிதவித்ததாகவும், தங்களது செல்போன்களை கொள்ளையடித்தால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் நிர்கதியாக நின்றதாக பரபரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்