சென்னை விமான நிலையத்திற்கு ஜனவரி மாதத்தில் பயணிகள் வருகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் 12,380 விமானங்களில் 17,61,426 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
ஒரு நாளைக்கு சராசரியாக 400 விமானங்களில் சராசரியாக 56,822 பயணிகள் ஜனவரி மாதத்தில் பறந்துள்ளனர்.
கடந்த டிசம்பரில், பயணிகளின் எண்ணிக்கை 17,22,496 ஆகவும், விமானங்களின் எண்ணிக்கை 12,103 ஆகவும் இருந்தது. டிசம்பர் 23ஆம் தேதி மட்டும் சென்னை விமான நிலையத்தில் 62 ஆயிரத்து 486 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
பனிமூட்டம் காரணமாக நகரத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் மாற்றியமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.