Friday, April 26, 2024 11:39 pm

கண்ணீர் மல்க ஸ்ரீமதியின் உடல் தகனம்! பொதுமக்கள் மற்றும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அஞ்சலி!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் தான்னர்வலர்கள் கலந்து கொண்டு நடத்தினர் அந்தப் போராட்டமானது மாலை நேரத்தில் வன்முறையாக வெடித்தது.

மேலும் அதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை மாணவி உடலை மறுக்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் மனு அளித்திருந்தார். அந்தமனுவை விசாரித்து நீதிபதிகள் மாணவியின் உடலை மறுபிரேதபரிசோதனை செய்ய உத்திரவிட்டனர். மேலும் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த நாட்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த விசாரணையில் தற்ப்போது பல தடயங்கள் கிடைத்து வருகின்றனர்.

மேலும் மாணவியின் உடலை வாங்க மறுத்த பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில் அந்த மாணவியின் உடல் இன்று காலை 7 மணிக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் மேலும் மாலைக்குள் இறுதிச் சடங்குகளை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும் அந்த உத்தரவின் படி மாணவியின் உடல் இன்று காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் வீட்டிற்கு வந்த அமைச்சர் சிவி கணேசன் ,எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாலை அணிந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அந்த கள்ளக்குறிச்சியில் இருந்து மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமத்திற்கு மாணவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் இறுதி சடங்கின் நிகழ்ச்சியில் மாணவியின் ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும் வெளியூரை சேர்ந்த நபர்கள் கலந்து கொள்ள கூடாது எனவும் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களிலும் குறிப்பாக பெரிய நெசலூர் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவியின் இறுதி சடங்கு வரை எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்