உங்களிடம் உள்ள வெள்ளி பொருட்களை வெறும் 5 நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி? சுலபமான வழி இதோ

0
உங்களிடம் உள்ள வெள்ளி பொருட்களை வெறும்  5 நிமிடத்தில்  சுத்தம் செய்வது எப்படி? சுலபமான வழி இதோ

நம்முடைய வீட்டில் சுப காரியங்களுக்கு நாம் ஆசை ஆசையாக, வெள்ளிப் பாத்திரங்கள், கொலுசு, பூஜைக்கு தேவையான வெள்ளி பொருட்களை வாங்கி அழகு பார்ப்போம். ஆனால், நீண்ட நாட்கள் சென்றதும் நிறம் மங்கி கருப்பாக மாறி விடுவதை நாம் பார்த்திருப்போம். அதை சுத்தம் செய்வது நமக்கு மிகப் பெரிய விஷயமாக இருக்கும்.

வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்ய கடையில் பிரத்தேகமாக விற்கப்படும் பொருட்கள் கொண்டு தேய்த்தாலும் வேண்டிய பலன் கிடைப்பதில்லை.

உங்களிடம் வெள்ளி இருந்தால் அவைகளை சுத்தப்படுத்த சில அடிப்படையான விஷயங்களை பற்றி நீங்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். அவை, என்னென்னெ என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக வெள்ளி பொருட்களை சுத்தம் செய்ய எலுமிச்சை, பேக்கிங் சோடா போன்ற பொருட்கள் உபயோகப்படுத்துவது உண்டு. இது எதுவுமே தேவையில்லை டூத் பவுடர் கொண்டு வெறும் ஐந்து நிமிடம் தேய்த்தால் உங்களுடைய வெள்ளிப் பொருட்கள் அனைத்தும் புத்தம் புதியதாக மாறிவிடும்.

ஆம், நாம் பற்களுக்கு உபயோகிக்கும் கோல்கேட் டூத் பவுடர் அல்லது வேறு ஏதேனும் டூத் பவுடரை கொண்டு, வெள்ளி பாத்திரங்கள், கொலுசுகள், பூஜை சாமான்கள் என்று எந்த பொருளாக இருந்தாலும் அதில் நன்கு தேய்த்து விட்டால் நொடியில் பளபளன்னு மின்னும்.

ஆனால், இதற்கு தண்ணீர் தேவையில்லை. பற்பொடி பல்லை பளிச்சென்று ஆக்குதோ இல்லையோ வெள்ளியை நிச்சயம் ஆக்கும்.ஏனெனில், டூத் பவுடர் வெள்ளியின் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல் புரியும். நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பயன் அடையுங்கள்.

No posts to display