நீங்கள் சமையல் எரிவாயு நீண்ட நாட்களுக்கு பயன்பாடுத்தனுமா? குக்கரை இப்படி யூஸ் பண்ணுங்க

0
நீங்கள் சமையல் எரிவாயு நீண்ட நாட்களுக்கு பயன்பாடுத்தனுமா? குக்கரை இப்படி யூஸ் பண்ணுங்க

சமையல் எரிவாயு தினமும் பயன்படுத்தும் அளவும் குறையும், அதே நேரத்தில் சுவையான உணவும் கிடைக்கும்.பிரஷர் குக்கரில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சமையல் எரிவாயு பயன்பாட்டை குறைத்து, கேஸ் பில் மிச்சம் பிடிக்கலாம்.

குக்கரை பொறுத்தவரை நம் தேவைக்கு, சமைக்கும் உணவுக்கு, மற்றும் அளவுக்கு ஏற்ப பல்வேறு பாத்திரங்களை பயன்படுத்தலாம்.

நீங்கள் ஒரே நேரத்தில் பருப்பு, காய்கறிகள், அரிசி ஆகியவற்றை வேக வைக்க பல அடுக்குகள் கொண்ட குக்கரை பயன்படுத்தும்போது சிலிண்டர் கேஸ் மிச்சமாவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நேரமும் மிச்சமாகும் சமையலும் மிக எளிதாக செய்து முடிக்கலாம்.பல உணவுகளை சமைக்கும் பொழுது நீங்கள் ஒரே நேரத்தில் குக்கரில் வேகவைத்து, சமைக்க தயார் செய்து கொள்ளலாம்.

அரிசி சாதம், பருப்பு வகைகள், மற்றும் வேக வைப்பதற்கு மட்டும் தான் பெரும்பாலும் குக்கர் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் சாம்பார் முதல் கிரேவி வரை பல வகையான குழம்பு வகைகள் அனைத்தையுமே குக்கரில் எளிதாகவும் விரைவாகவும் செய்து முடிக்கலாம்.

குக்கரில் குழம்பு வகைகளை செய்யும்போது சுவை குறைந்துவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் நீங்கள் கடாயில் செய்வது போலவே அதே முறை முறையை பயன்படுத்தி குக்கரிலும் எந்தவிதமான குழம்பு அல்லது கிரேவியை சுவை குறையாமல் செய்ய முடியும்.

குக்கரில் விரைவாக சமைக்க, அதை சரியான முறையில் மெயின்டைன் செய்ய வேண்டும்.

குக்கர் மூடியில் சிறிய துவாரங்கள் வழியாகத்தான் ஸ்டீம் வெளியேறும். அந்த துவாரங்கள் அடைபட்டிருந்தால் உணவு விரைவாக வேகாமல் போகும், இதனால் கேஸ் அதிகமாக செலவாகும்.

எனவே குக்கரின் மூடியில் இருக்கும் அந்த சிறிய துளைகளை நன்றாக சுத்தம் செய்து, அடைப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு உணவை சமைப்பதற்கும் எவ்வாறு வழிமுறைகள் உள்ளதோ, அதேபோல ஒவ்வொரு பாத்திரத்தில் சமைக்கும் போதும், சில வழிமுறைகள் உள்ளன.

பிரஷர் குக்கரில் சமைக்கும் பொழுது பலரும் உணவுப் பொருளைச் சேர்த்து லாக் செய்து, அதற்கான ‘வெயிட்டையும்’ போட்டு, அதன் பின்பு தான் கேஸை ‘ஆன்’ செய்வார்கள். இவ்வாறு செய்வதால் அதிகமான சிலிண்டர் எரிவாயு செலவாகும்.

பிரஷர் குக்கரில் தண்ணீர் விட்டு, நன்றாக சூடான பிறகு தான், நீங்கள் வேக வைக்கும் ஒவ்வொரு பொருளாக சேர்க்க வேண்டும். முன்கூட்டியே சூடு செய்யப்பட்ட பாத்திரத்தில் நீங்கள் உணவை சேர்க்கும் போது அது மிகவும் எளிதில் வெந்துவிடும். இதனால் உங்கள் கேஸ் மிச்சமாகும்.

No posts to display