வயது முதிர்ந்த நிலையில் டைவ் அடிக்கும் பாட்டி… இணையத்தில் வைரலான வீடியோவைக்கண்டு ஆடிப்போன பார்வையாளர்கள்

0
வயது முதிர்ந்த நிலையில்  டைவ் அடிக்கும் பாட்டி… இணையத்தில் வைரலான வீடியோவைக்கண்டு ஆடிப்போன பார்வையாளர்கள்

70 வயதுடைய பாட்டி ஒருவர் செய்த சேட்டை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் அமைந்திருக்கும் ஹர்கி பைடி பாலத்திலிருந்து 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் கங்கைநதியில் டைவ் அடிக்கும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த குறிப்பிட்ட வீடியோ காட்சியை அசோக் பசோயா என்ற நபர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஹர்கி பைடி பாலத்திலிருந்து கங்கை நதியில் 70 வயதான பாட்டி (ஓம்வதி), ஒருவர் எந்தவித பயமின்றி குதிக்கிறார்.

அதன் பின்னர் அசால்ட்டாக நதியில் நீச்சலடித்துக் கொண்டு கரையேறுகிறார். அங்கு கூடியிருக்கும் மக்கள் அதைப் பார்த்து, கத்திக் கூச்சலிட்டு, ஆரவாரம் செய்கின்றனர்.

இதுகுறித்து, அந்த பாட்டி தெரிவிக்கையில், தான் சிறுவயதிலிருந்தே நதிகளில் நீந்து வதால் யாரும் என்னை பின் தொடருவதில்லை.

தன்னை பற்றி யாரும் கவலைப்படமாட்டர்கள் என்றார். இவரைப்பற்றி நீர்வரத்து அதிகமாக இருந்தபோதிலும், உதவியின்றி நதியின் கரையை அவர் பத்திரமாக அடைந்தார்.

மேலும், அவர் ஒரு அற்புதமான நீச்சல் வீராங்கனை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No posts to display