Monday, December 5, 2022
Homeபொதுஇணையத்தில் வைரலாகும் வாட்ஸ்அப் பின் புதிய அப்டேட் !! இத என்னென்ன தெரிஞ்சா...

இணையத்தில் வைரலாகும் வாட்ஸ்அப் பின் புதிய அப்டேட் !! இத என்னென்ன தெரிஞ்சா நீங்க சந்தோசத்துள்ள துள்ளி குதிப்பீங்க….!!

Date:

Related stories

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்னையில் புதிய பயிற்சி மையத்தை அமைக்கிறது

நகரத்தை தளமாகக் கொண்ட இருசக்கர வாகன உற்பத்தியாளர், ராயல் என்ஃபீல்டு, மாணவர்கள்...

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

நந்தமுரி பாலகிருஷ்ணா 2023-ல் அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்றான வீர சிம்ஹா...

ரஷ்யாவின் வாக்னர் குழு உக்ரைனுக்கு ‘இரத்தம் தோய்ந்த தொகுப்புகளை’ அனுப்புவதை மறுக்கிறது

ரஷ்யாவின் கூலிப்படை நிறுவனமான வாக்னர் குரூப் விலங்குகளின் கண்கள் அடங்கிய "இரத்தம்...

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் ஆழ்துளை கிணறு தோண்டும்போது தங்க காசுகள் சிக்கியது

ஏடுவடலா பாலம் கிராமத்தில் உள்ள வயலில் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது மண்...

சென்னையில் தங்கும் விடுதியில் மடிக்கணினி, கேஜெட்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்

தரமணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கும் விடுதிகளில் அத்துமீறி நுழைந்து...
spot_imgspot_img

மெசேஜிங் இயங்குதளம் அதன் விண்டோஸ் பீட்டா செயலியை மேம்படுத்த விரும்புவதால் WhatsApp பீட்டா பயனர்கள் ஒரு பெரிய புதுப்பிப்பைப் பெற்றுள்ளனர். WABetaInfo இன் சமீபத்திய தகவலின்படி, மைக்ரோசாஃப்ட் ஸ்டோரிலிருந்து சமீபத்திய புதுப்பிப்பை நிறுவும் நபர்களுக்காக WhatsApp இப்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சூழல் மெனுவை வெளியிடுகிறது.

இப்பொழுது பெரும்பாலும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிறது. தங்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் தான் நாம் மெசேஜ் அனுப்புகிறோம். ஆனால் நமக்கு கடுப்பாகிறது, எப்பொழுது? சும்மா சும்மா மெசேஜ் அனுப்பிட்டு ரிப்ளை பண்ணு என்று ஒரு சில பேர் நம்மை வெறுப்பேத்துவார்கள். அதற்காக வந்த அப்டேட் தான் ‘ஹைட்’ ஆப்ஷன். அதாவது நீங்கள் மெசேஜ் பார்திடீர்கள் என்னும் ப்ளூ டிக் மார்கையும், கடைசியாக எப்பொழுது வாட்ஸ்அப் வந்து பார்த்தீர்கள் என்பதையும் நாம் ஹைட் செய்து வச்சிக்கலாம். அப்பொழுது தான் யாராவது ஏன் நான் உனக்கு மெசேஜ் பண்ணேன் ஆனா நீ ரிப்ளை பண்ணவே இல்ல என்று கேட்டால் சாரி நான் நேத்து வாட்ஸ்அப் பாக்கவே இல்ல என்று டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகிடலாம்.

அது என்ன சிக்கல் என்றால், நாம் இப்படி பொய் சொல்லி டிமிக்கி கொடுத்தாலும் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பொழுது ‘ஆன்லைன்’ என்று காமிக்குமே அதை எப்படி ஹைட் பண்றது. இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு பயனர்கள் கோரிக்கை வைத்து கொண்டே இருந்தனர். ஏனெனில் இந்த அம்சம் மட்டும் செயல்பாட்டிற்கு வந்தால் நம்மை உளவு பார்ப்பவர்கள், நம்மை பின்தொடர்பவர்கள் ஆகியவர்களிடம் இருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம். எனவே, இதற்கும் முட்டுக்கட்டை போடும் வகையில் மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் இதை நடைமுறைக்கு கொண்டுவருவதாக WABetaInfo கூறியது.

மேலும் WABetaInfo ஒரு ட்வீட் இல் ‘ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கும் திறனில் வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படுகிறது!’. ஒருவழியாக, நீங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் போது, நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்கள் என்பதை யார் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்வுசெய்யும் அம்சம் உங்களுக்கு அணுக கிடைக்க உள்ளது என்று தெள்ளத்தெளிவாக கூறியது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் ஆகிய டிவைஸ்களில் அடுத்த அப்டேட்டாக கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒரு அப்டேட் வர வேண்டும் என்றால் முதலில் ஒரு யூசருக்கு அதை கொடுத்து செக் செய்து பார்ப்பார்கள். பிறகு அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிந்ததும் அதை மற்ற யூசர்களுக்கு அனுப்புவார்கள். அப்படி இருக்கும் பொழுது நமக்கு இந்த அப்டேட் வந்துவிட்டதா? என்று எப்படி தெரிந்துகொள்வது. தொடர்ந்து படியுங்கள்!

இதை நீங்க வாட்ஸ்அப் ப்ரைவஸி செட்டிங்ஸ் இல் பார்க்க முடியும்.வெளியிட ஷ்கிரீன் ஷாட் படி, இந்த இந்த அம்சம் லாஸ்ட் சீன் செட்டிங்ஸ்-க்கு உள்ளேயே, இரண்டு புதிய விருப்பங்களின் கீழ் அணுக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது “”Everyone” மற்றும் “Same as Last Seen” என்கிற பெயரின் கீழ் ‘ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ்’ அம்சம் கிடைக்கும்.

இப்படி அனைவரும் எதிர்பார்க்கும் இந்த அம்சம் எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்று கேட்டால் நிஜமாக தெரியாது. ஆனால் இது தற்போது உருவாக்குதலில் இருக்கிறது, இன்னும் சோதனை கட்டத்திற்கு வராததால் இன்னும் சிறிது காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை சற்று பொறுமையுடன் வெயிட் பண்ணுங்க

தகவலின்படி, அனைவருக்கும் செய்திகளை நீக்குவதற்கான புதிய வரம்பு 2 நாட்கள் மற்றும் 12 மணிநேரம் ஆகும். எதிர்காலத்தில் நீங்கள் குரூப் அட்மினாக இருந்தால், குரூப்களில் உள்ள எந்த செய்தியையும் நீக்கும் திறனிலும் வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இருப்பினும், புதுப்பிப்பின் வெளியீட்டு தேதி இன்னும் அறியப்படாததால், அதைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories