Saturday, April 27, 2024 11:16 pm

போர் நிறுத்தம் : இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தலைமையிலான பாலத்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே 2023 அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய போர், இன்று (நவம்பர் 22) 46வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போரின் தொடக்கத்தில், காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் காசாவை சுற்றி வளைத்து பீரங்கி குண்டுகளால் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியதில், காசாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் தடைப்பட்டன. இதனால், உலகத்திலிருந்து காசா தனிமைப்படுத்தப்பட்டது.

ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனக் கூறப்படுகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக, உலக நாடுகள் பலவும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், போரின் தாக்கத்தைக் குறைக்க, ஹமாஸ் அமைப்புடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க இந்த போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இந்த தற்காலிக போர் நிறுத்தம், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்