Monday, April 29, 2024 4:45 am

மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து : 40 படகுகள் எரிந்தது

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நெருப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட படகுகள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. தீயில் மீனவர்களின் பொருட்களும் சேதமடைந்தன. இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், இந்த தீ விபத்து மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம்,  இந்த விபத்தை அடையாளம் தெரியாத நபர், படகுகளுக்கு தீ வைத்ததாக மீனவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, இந்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்