Monday, April 29, 2024 9:51 pm

செந்தில்பாலாஜி தொடர்ந்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இலாகா இல்லாமல் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பதற்கு ஆளுநர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதற்கும், அவரை நீக்கி உத்தரவிட்டதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிட்டது.

“இந்தச் சூழ்நிலையில், சட்டப்பிரிவு 226ன் கீழ், ஆளுநரிடம் இருந்து குறிப்பிட்ட உத்தரவுகள் எதுவும் வராத நிலையில், நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்” என்று தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆடிகேசவலு அடங்கிய அமர்வு மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பியது.

செந்தில்பாலாஜியின் இலாகாக்கள் மற்ற அமைச்சரவை உறுப்பினர்களுக்கு மாற்றப்பட்டன, ஆனால் அவர் இலாகா இல்லாமல் அமைச்சராக தொடர்வார் என்று ஜூன் 16 அன்று மாநில அரசு வெளியிட்ட அறிக்கையை மனுதாரர்கள் சவால் செய்தனர்.

“கவர்னரே அதிருப்தி தெரிவித்தபோது, இலாகா இல்லாமல் செந்தில்பாலாஜி எப்படி அமைச்சராக நீடிக்க முடியும்? கவர்னரின் கருத்துக்கு நீதிமன்றத்தில் என்ன மதிப்பு உள்ளது,” என மனுதாரர்கள் கேள்வி எழுப்பினர்.

தலைமை நீதிபதி கங்காபூர்வாலா குறுக்கிட்டு, இலாகா இல்லாமல் அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பதை கவர்னர் ஏற்க மறுத்ததற்கும், அவரை பதவி நீக்கம் செய்ததற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

ஆளுநரின் குறிப்பிட்ட உத்தரவு இல்லாததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று பெஞ்ச் கூறியது. பின்னர், இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்