Monday, April 29, 2024 1:55 pm

செந்தில் பாலாஜியின் கைதுக்கு முக்கிய காரணமே அந்த ஒரு பவர் கட்டா ! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பணமோசடி வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் புதன்கிழமை அதிகாலை கைது செய்தது. சென்னையில் உள்ள செந்தில்பாலாஜியின் இல்லத்தில் 18 மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து, புதன்கிழமை மதியம் 2 மணியளவில் செந்தில் பாலாஜி மருத்துவப் பரிசோதனைக்காக காரில் சென்னை அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆவணங்களை ஏற்றிச் சென்ற மூன்று வாகனங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தன.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பின் 3 முக்கியமான காரணங்கள் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசியலையே குலுக்கிய சம்பவம் இன்றும் நேற்றும் நடந்து உள்ளது. நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.

வீட்டோடு சேர்த்து தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்து உள்ளனர்.அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அமைச்சர் அலுவலகத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகளையும் அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவரின் வீடு உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடந்தது.

5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை ஒவ்வொரு இடங்களிலும் சோதனை செய்து இருக்கின்றனர். இந்த ரெய்டுகள் காரணமாக தலைமை செயலகம் பரபரப்பில் உச்சத்தில் இருக்கிறது.

கைது: நேற்று 17 மணி நேரம் சோதனை முடிந்த பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பின் 3 முக்கியமான காரணங்கள் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காரணம் 1 – ஆளுநர் – செந்தில் பாலாஜி மூவ்: அதன்படி சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜி குறித்து புகார் கொடுத்தார். அமைச்சர் செந்தில் இருந்து நீக்க பாலாஜியை வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்தார். அதேபோல் அண்ணாமலையும் செந்தில் பாலாஜிக்கு எதிராக இதேபோல் புகார் கொடுத்தார்.

இதில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக அண்ணாமலை பேட்டியும் கொடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு உள்ள நிலையில் அவர் அமைச்சராக தொடர்ந்தால் சரியாக இருக்காது என்று ஆளுநர் கருதியதாக கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அமலாக்கத்துறை கைது காரணமாக செந்தில் பாலாஜிக்கும் ஸ்டாலினுக்கும் பிரஷர் கூடி உள்ளது.

காரணம் 2 – அதிகாரிகள் மீது தாக்குதல் – டெல்லி கோபம்: கடந்த முறை வருமான வரித்துறை ரெய்டின் போது ரெய்டு நடக்கும் இடங்களில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக போர்கொடி தூக்கி போர்த்தடம் செய்தனர்.

முக்கியமாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட சென்ற போது பெண் அதிகாரியிடம் கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இந்த வாக்குவாதத்தில் திமுக நிர்வாகியை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கி உள்ளனர். திமுக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து.. உன் ஐடி கார்ட் காட்டு.. நீ போய் ரெய்டு பண்ணு.. ஆனா அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு போ.. உங்க வீட்டு ஆம்பளையா இப்படித்தான் அடிப்பியா, என்று கேட்டுள்ளார் கவிதா கணேசன். இதனால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரில் திமுக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் சில வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் புகார் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு போலீசிடம் தெரிவிக்காமல் வந்ததே பாதுகாப்பு குறைப்பாட்டிற்கு காரணம் என்று அப்போது திருப்பூர் எஸ்பியும் விளக்கம் கொடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த முறை மத்திய துணை ராணுவ படை வீரர்கள் கடைசி நேரத்தில் வந்து ரெய்டு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். இதை டெல்லி விரும்பாத நிலையிலேயே லேட்டாக நடத்தப்பட வேண்டிய அமலாக்கத்துறை ரெய்டு மற்றும் கைது உடனே நடத்தப்பட்டு உள்ளதாம்.

காரணம் 3 – மின்சாரம் இல்லை – அமித் ஷா: சமீபத்தில் சென்னை விமான நிலையத்துக்கு அமித்ஷா வந்தவுடன் ஒரு பகுதியாக மின்சாரம் தடைபட்டது. அவர் காரில் தொண்டர்களுக்கு கை காட்டிக்கொண்டு இருந்த போது மின்சார தடை ஏற்பட்டது. 15 நிமிடம் அங்கே மின்சார தடை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலை மறியலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினரின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பாஜகவினர் பலரின் முகங்கள் இதனால் சுருங்கியது.

இப்படி அமித் ஷா வந்த போதே மின்சாரம் சென்றது செந்தில் பாலாஜியின் சேட்டை என்று பாஜக கருதி இருக்கிறதாம். இதனால் பாஜக தரப்பு கோபம் அடைந்துள்ளது. அமித் ஷாவும் கண்களாக சிவந்துள்ளார். இதை அடுத்தே லேட்டாக நடத்தப்பட வேண்டிய அமலாக்கத்துறை ஆக்சன் உடனே நடத்தப்பட்டு உள்ளதாம்.திமுகவை வீக்காக காட்டும் ரெய்டு: மேலும் ஸ்டாலின் இருக்கும் போதே தலைமை செயலகத்திலேயே ரெய்டு விட்டோம் பார்த்தீர்களா.. உங்க டாப் மினிஸ்டரையே தூங்கிட்டேன் என்று ஸ்டாலினையும், அரசையும் வீக்காக காட்டும் முடிவில் இப்படி டெல்லி தலைமை செயலகம் உள்ளேயே ரெய்டு விட்டதாக கூறப்படுகிறது.

இது போன்ற ரெய்டுகள் இப்போதைக்கு முடியாது.. கண்டிப்பாக லோக்சபா தேர்தல் வரை தொடரும் என்று டெல்லி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எம்.சுப்பிரமணியன், ஈ.வி. வேலு மருத்துவமனைக்குச் சென்றபோது, அமைச்சர் சேகர் பாபு, செந்தில் பாலாஜி சுயநினைவின்றி இருப்பதாகவும், ஐசியூ கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறினார். என்.ஆர். திமுக ராஜ்யசபா எம்பியும் மூத்த வழக்கறிஞருமான இளங்கோ, செந்தில்பாலாஜியின் கைது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் விரைவு அதிரடிப் படை (RAF) குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பணமோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கரூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் ED செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. தி.மு.க.வினருக்கு எதிரான வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக காவல்துறை மற்றும் ED விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. இது நரேந்திர மோடி அரசின் மிரட்டல் தந்திரம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது பழிவாங்கும் செயல். மேற்கு வங்கம், டெல்லி மற்றும் இங்கு பாஜக அல்லாத அரசு இருக்கும் மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு பல தவறான செயல்களைச் செய்கிறது என்று தமிழக அமைச்சர் பொன்முடி கூறினார்.

கடந்த மாதம் பாலாஜிக்கு நெருக்கமானவர்களிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்

கரூரைச் சேர்ந்த திமுக மூத்த தலைவரான பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் வகித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்