Monday, April 29, 2024 5:53 pm

வசமாக சிக்கிய செந்தில்பாலாஜி ! செந்தில்பாலாஜி கைதுக்கு முக்கிய காரணமே இதுவா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி ஓமந்தரூர் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை அதிகாலை இடி காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் 18 மணி நேர சோதனை நடவடிக்கைக்குப் பிறகு கைது செய்யப்பட்டது. 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தது தொடர்பான வழக்கு இதுவாகும். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள நிலையில், இதற்கான நடைமுறைகள் என்னென்ன தெரியுமா?இன்று அதிகாலை கைது நடவடிக்கையில் இறங்கிய நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.. ஆனால், அமைச்சருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுவிடவும், உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. தொடர் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது..ஆனால், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து வெளியாகும் தகவல்கள் எல்லாம் அதிர்ச்சி தந்து வருகின்றன..

உடல்நிலை பாதிப்பு: மயக்க நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள்.. காது பக்கம் லேசாக வீக்கம் இருப்பதாக சொல்கிறார்கள்.. நான்கைந்து முறை கூப்பிட்டு பார்த்தும், அவர் கண் விழிக்கவில்லை என்கிறார்கள்.. அமைச்சர்கள் மருத்துவமனையிலேயே விழிப்பாய் இருக்கிறார்கள்.. ஒவ்வொருவராக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறார்கள். இதனால் தமிழகம் உட்பட திமுகவுக்குள்ளேயே ஒருவித பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

உடல்நலக்குறைவு: முன்னதாக, விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றபோதுதான், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.. பிறகுதான், அவரது கைது குறித்து செந்தில் பாலாஜி சகோதரரிடம் தெரிவிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்..

விஷயத்தை கேள்விப்பட்டதுமே, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.. செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்… ஏற்கனவே, ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இப்போது, சிஆர்பிஎஃப். வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டுகளுடன் அவர்கள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது, மிகப்பெரிய பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.

160/100: இதனிடையே, செந்தில்பாலாஜி உடல்நிலை எப்படி உள்ளது என்று ஒரு பேட்டிக்கு மருத்துவமனை டாக்டர்கள் பேட்டி தந்துள்ளனர்.. அதில், ‘செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட போது அவருடைய உயர் ரத்த அழுத்தம் 160/100 ஆக இருந்தது. இதய துடிப்பில் மாற்றம் இருந்தது. ECG யில் சில மாறுதல்கள் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு வராமல் இருக்க ICUவில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளனராம்.

ரெய்டு: வழக்கமான ரெய்டு போல இல்லாமல், நேரடியாகவே குறி வைக்கப்பட்டுதான், அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியிருக்கிறார்கள்… எனினும், அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தால், அதற்கான நடைமுறைகள் என்ன? என்பதையும் அறிய வேண்டி உள்ளது. அதுவும், அமைச்சராக இருக்கும் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தால், மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை பார்ப்போமா:

1. அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆளும் கட்சியில் உள்ள ஒரு அமைச்சரை கைது செய்தார்கள் என்றால், அதுகுறித்து உடனடியாக சட்டப்பேரவை செயலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்படும்.

2. சட்டப்பேரவை செயலகம் மூலம், சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படும்.

3. ஒருவேளை கைது சம்பவம் நடக்கும்போது, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தால், உடனடியாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும்.

4. சட்டப்பேரவை நடைபெறாத பட்சத்தில், 5 நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.அமைச்சர் செந்தில்பாலாஜி கைதையடுத்து கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் காவல்துறையினரை உஷார்படுத்தியுள்ளார். இதேபோல், அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கூடுதல் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநில மின்சாரம், கலால் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி, புதன்கிழமை அதிகாலை அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் 18 மணி நேர சோதனை நடவடிக்கைக்குப் பிறகு கைது செய்யப்பட்டது. 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தது தொடர்பான வழக்கு இதுவாகும். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து ED குழுவினர் அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்