Saturday, April 27, 2024 4:39 am

குஜராத் தோல்விக்கு காரணம் இதுதான்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னை – குஜராத் அணிக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சைத் தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய சென்னை அணி முதல் இன்னிங்ஸ் விளையாடிய போது ஏற்பட்ட மழையில் DLS முறைப்படி 15 ஓவராக குறைத்து 171 டார்கெட் செய்யப்பட்டது.

இந்த டார்கெட்டை 15 ஓவரில் நெருங்கி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. ஆனால், குஜராத் அணி தங்களது தோல்வி குறித்துக் கூறும்போது, ”இந்த ஐபிஎல் இறுதிப்போட்டியின் 2வது பாதியில் மழை பெய்தது குஜராத் அணிக்கு எமனாக அமைந்தது. இதனால் பந்துவீச்சாளர்கள் பந்துவீசச் சிரமப்பட்டனர். அப்படி இருந்தும் குஜராத் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கியது. ஆனால், கடைசி 2 பந்துகள் ஆட்டத்தின் போக்கை மாற்றின. ஜடேஜா சிக்சர் அடித்ததும் தடுமாறிய மோகித் சர்மா கொஞ்சம் நேர்த்தியாக அடுத்த பந்தை வீசியிருந்தால் வெற்றி குஜராத் வசமாகியிருக்கும் என்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்