Wednesday, March 27, 2024 8:45 pm

இன்னொரு சீசன் விளையாடுவதுதான் ரசிகர்களுக்கு என்னுடைய பரிசு : எம்.எஸ்.தோனி பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அகமதாபாத்தில் குஜராத் அணியை வீழ்த்திய பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்கள் ” இந்த சூழ்நிலைகள் பார்த்தால், இதுதான் என் ஓய்வை அறிவிக்கச் சரியான நேரமாக இருந்திருக்கும். இப்படியே விடைபெறுவதுதான் எளிதான விஷயமாக இருக்கும். அடுத்த 9 மாதங்கள், கடுமையாக உழைத்து இன்னொரு சீசன் ஆட முயல்வது, உடல்ரீதியில் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றார்.

மேலும், அவர் ” இன்னும் ஒரு சீசனுக்கு என் உடல் அதற்கு ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், ரசிகர்கள் என் மீது பொழிந்த அன்பிற்கு, என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது, இன்னொரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான்” எனக் கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்