Tuesday, April 30, 2024 12:24 pm

சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியானது

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 21 வரை நடைபெற்றது.இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். ஏற்கனவே இன்று (மே 12) 12 ஆம் தேர்வு பொதுத்தேர்வு வெளியான நிலையில்,தற்போது 10ஆம் பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று சற்றுமுன் வெளியானது.

இதில் 93.12 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த சிபிஎஸ்இ-யில் வழக்கம் போல் யார் முதலிடம் என்பதை அறிவிக்கவில்லை. ஏனென்றால், மாணவர்களிடையே தேவையற்ற போட்டியை தவிர்க்க வேண்டியே எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.எனினும், பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 0.01 சதவீத மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றனர்.

மேலும், கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 5.38% குறைந்துள்ளது. இதில் 99.91% தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. 98.64% உடன் பெங்களூரு 2ம் இடத்திலும், 97.40% உடன் சென்னை 3ம் இடத்திலும் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்