Tuesday, April 23, 2024 12:22 am

ஈரோடு இடைத்தேர்தல் உதயநிதியின் 2 நாள் பிரசாரம் இன்று தொடங்குகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், கருணாநிதி குடும்பத்தின் இளம் வாரிசும், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து இன்று முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இன்று மாலை 4 மணிக்கு ஈரோடு குமலன் குட்டை பகுதியில் பிரசாரத்தை தொடங்கி முருகேசன் நகர் வழியாக கணபதி நகர் செல்கிறார். அங்கு பொதுமக்களிடம் பேசும் உதயநிதி, பின்னர் அம்பேத்கர் அடுக்குமாடி குடியிருப்பு, நாராயணவலசு, இடையன்காட்டுவலசு வழியாக முனிசிபல் காலனிக்கு வருகிறார். பின்னர் கருணாநிதி சிலை அருகே பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். அதன்பின், பழனிமலை ரோடு, கமலா நகர், பம்பிங் ஸ்டேஷன் ரோடு, வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம், பி.பி.அக்ரஹாரம் வழியாக சென்று காந்திநகரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

நாளை (செவ்வாய்கிழமை) மாலை 4.30 மணிக்கு ஈரோடு அரசு மருத்துவமனை அருகே 2வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்பின், ஈரோடு எஸ்கேசி ரோடு, கீரமடை, சந்தல்மேடு, ஆலமரத்து தெரு, மரப்பாலம், மண்டபம் ரோடு, காமத்தை காட்டு அய்யனார் கோவில் ரோடு, இந்திராநகர் வழியாக, கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.

இத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிரசாரத்துக்கு பல மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை கட்சி அழைத்து வருகிறது.

மேலும் ஈரோடு கிழக்கின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் செய்து வாக்கு கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்