மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் காலமானார் என்று தினத்தந்தி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகராஜன் வெள்ளிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
மதுரையில் உள்ள விஎன் நியூரோ கேர் சென்டர் மற்றும் மருத்துவமனையில் மூத்த நரம்பியல் ஆலோசகராக பணிபுரிந்தார். அக்டோபர் 2022 இல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அவரை மதுரையில் புதிதாக அமைக்கப்பட்ட எய்ம்ஸின் தலைவராக நியமித்தது.