தமிழகம் முழுவதும் 6 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கான பள்ளி திங்கள்கிழமை திறக்கப்பட்டது. டிசம்பர் 23ஆம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து, மாணவர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.