நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ஐவர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.