Saturday, April 27, 2024 2:58 am

மழைநீர் வடிகால் பணிகள்: ஆற்காடு சாலை அருகே 3 மாதங்களாக போக்குவரத்து மாற்றம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருவள்ளுவர் சாலை முதல் அம்மா உணவகம் வரை சுரேஷ் நகர் சந்திப்பு (வெளியேறும் திசை) வரை நெடுஞ்சாலைத் துறையின் மழைநீர் வடிகால் பணிகளுக்கு வசதியாக வளசரவாக்கம் காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை நகரப் போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.

திங்கள்கிழமை (செப்டம்பர் 26) முதல் ஜனவரி 15, 2023 வரை போக்குவரத்து மாற்றம் அமுல்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆற்காடு ரோடு மெகாமார்ட் சந்திப்பில் இருந்து அரசமரம் சந்திப்புக்கு வரும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை இல்லை.

திருவள்ளுவர் சாலையில் மெகாமார்ட் சந்திப்பில் இருந்து சுரேஷ் நகர் சந்திப்பு வரை போக்குவரத்து ஒருவழியாக மாற்றப்படும்.

ராமாபுரம் அரசமரம் சந்திப்பில் இருந்து ஆற்காடு சாலைக்கு செல்லும் வாகனங்கள் சுரேஷ் நகர் சந்திப்பில் கட்டாயம் இடதுபுறமாக வந்து, சௌத்ரி நகர் – ஆற்காடு சாலை வழியாக போரூர் அல்லது வடபழனிக்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்