வயது முதிர்ந்த நிலையிலும் இளம் வயது போல் தோற்றமளிக்க வேண்டுமா! தினமும் இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

பலரும் அவர்களின் வயது கூடும் போது நாம் அதிக அளவு வயதானவர் போல் காட்சி அளிப்போமா என்று சிறு பயம் இருக்கும். முதலில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள அதிகளவு பருமன் ஏற்பட்டாலும் உடல் வடிவம் மாறி அதீத வயத அடைந்தவர் போல் விரைவிலேயே தோற்றமளிக்க கூடும்.அவ்வாறு 40 வயதிலும் 20 வயதை போல் தோற்றமளிக்க தினம் தோறும் இதை மட்டும் பின்பற்றினால் போதும்.

தினமும் பாதாம் பருப்பு வேர்க்கடலை போன்ற நட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சாப்பிடுவதால் இருந்த நோய் வராமல் தடுக்க உதவும். ஆயுளிலும் மூன்று ஆண்டுகள் அதிகரிக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். உங்கள் உணவில் வாரம் இரண்டு முறை மீன் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளதால் இருதய நோய் அபாயத்தை அதிக அளவு கட்டப்படுத்தும்.

கொலஸ்ட்ராலையும் குறைக்கும். ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் 3 மணி நேரம் இடைவெளி விட்ட பிறகு அடுத்த சாப்பாட்டை உண்ண வேண்டும். தினந்தோறும் ஐந்து வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடலாம். இது உடல் நலத்திற்கும் முகப்பொலிவிற்கும் நல்லது. போல தினம் தோறும் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிக அளவு எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் பலச்சாராக குடிக்கலாம்.

காலை உணவு மற்றும் மதிய உணவு இவை இரண்டும் 11 மணிக்கு உள்ளே முடித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் 12 மில்லி கிராம் அளவு இரும்பு சத்து எடுத்துக் கொள்கிறார்கள் என ஆய்வில் மூலம் தெரிய வந்துள்ளது. வயது கூடும் பொழுது அதற்கு ஏற்றார் போல் இரும்பு சத்து மிக்க பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.