உங்கள் தலையில் உள்ள இளநரையை முழுமையாக போக்க இதனை மட்டும் ஒரு வாரம் பயன்படுத்தினாலே போதும்!!

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில்,சீகக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தாமல்,கெமிக்கல் நிறைந்த பற்பல ஷாம்புகளை,பெண்கள் ஆண்கள் என இரு பாலரும் பயன்படுத்துகின்றனர்.
இதன் விளைவாக தற்போது இளம் வயதிலேயே முடிகள் நரைக்க ஆரம்பித்து விடுகிறது.இந்த இளநரையால் பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் இந்த இளநரையை போக்குவதற்கு பலவித ஹேர் கேர் மற்றும் ஷாம்புகளை பயன்படுத்தி தோல்வி அடைகின்றனர்.

இந்த இளநரை பிரச்சினைக்கு தீர்வு தரும் இயற்கை மருந்து மருதாணி இலையும்,நீலி அவுரி இலையுமாகும்.இந்த இரண்டு பொருட்களை நாம் சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும் இளநரை பிரச்சனைக்கு எளிதில் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

மருதாணி மற்றும் அவுரி இலையை எவ்வாறு சரியாக பயன்படுத்துவது??

முதலில் மருதாணி இலையையும் மற்றும் அவுரி இலையையும் தனித்தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு தலை குளிக்கும் முதல் நாள் இரவே உங்கள் முடிக்கு தகுந்தார் போல் மருதாணி பொடியை எடுத்து தண்ணீரில் கலந்து வைத்து விட வேண்டும்.சுமார் 6 மணி நேரமாவது இந்த மருதாணி பொடியானது ஊற வேண்டும்.பின்பு மறுநாள் காலையில் ஊற வைத்த மருதாணி பொடியை நன்றாக தலைமுடியில் தேய்த்து 15-லிருந்து 20 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.பிறகு தலைமுடியை சீகைக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்பை கொண்டு நன்றாக அலசிவிட்டு முடியை நன்றாக உலர்த்த வேண்டும்.ஹேர் டிரையரை பயன்படுத்தக் கூடாது.

தலைமுடி நன்றாக உலர்ந்தவுடன் அவுரி பொடியை தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கலந்து உடனடியாக தலையில் தேய்த்து 15லிருந்து 20 நிமிடம் உலர்த்தி சீகக்காய் போன்று ஏதும் தேய்க்காமல் அப்படியே தலையை நன்றாக அலசி விட வேண்டும்.இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால்
நரைமுடி விரைவில் முழுமையாக கருமுடியாக மாறிவிடும்.முதல் முறை பயன்படுத்தினாலே வித்தியாசம் நன்றாகத் தெரியும்.

குறிப்பு:

அவுரி பொடியை தண்ணீரில் கலந்து ஊற வைத்து விட்டால் அதன் தன்மை மாறக்கூடும் எனவே பொடியை தண்ணீரில் கலந்தவுடன் தேய்க்க வேண்டும்.

மருதாணி மற்றும் அவுரி இலைகளை வெயிலில் காய வைக்க கூடாது.நிழலில் மட்டுமே உலர்த்த வேண்டும்.

மேலே கூறிய முறைகளை சரியாக செய்தாலே உங்கள் இளநரைக்கு விரைவில் தீர்வு கிட்டும்.